|
வருடா
வருடம் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில்
கார்த்திகை தீப திருவிழா நடைபெறுவதற்கு முன்பு,
திருவண்ணாமலையில் எந்தவிதமான அசாம்பவிதமும் நடைபெறாமல்
இருப்பதற்காக அங்குள்ள காவல் தெய்வமான
துர்க்கையம்மனுக்கு உற்சவம் நடத்துவது வழக்கம். இந்த
வருடம் வருகிற 15ம் தேதி அருணாலேஸ்வரர் கோயிலில்
கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன்
நடைபெறவிருப்பதை முன்னிட்டு துர்க்கையம்மனுக்கான
உற்சவம் சிறப்பு பூஜைகளுடனும், அபிஷேகங்களுடனும் இன்று
தொடங்கியது. தொடர்ந்து அம்மனின் திருவீதி உலா நிகழ்ச்சி
நடைபெற்றது.
இதுபோல் பிடாரி அம்மன் உற்சவம் நாளை முதல் (நவ.13)
துவங்குகிறது. மேலும் அம்மனுக்கு சிறப்பு பூஜையும்,
அபிஷேகமும நடைபெறவிருக்கிறது. இதனைத் தொடர்ந்து நவம்பர்
14ம் தேதி நவக்கிரக பூஜை,விக்னேஸ்வர பூஜை, வாஸ்து
சாந்தி மற்றும் மிருத்சங்கிரஹணம் போன்றவைகள்
நடைபெறவிருக்கின்றன.
மறுநாள் நவம்பர் 15ம் தேதி அன்று காலை 8.05 மணிக்கு
மேல் 9.05 மணிக்குள் கார்த்திகை தீப திருவிழா
கொடியேற்ற
நிகழ்ச்சி நடைபெறுகிறது. கொடியேற்றத்தை தொடர்ந்து
கார்த்திகை தீப திருவிழா கோலாகலமாக நடைபெறவிருக்கிறது.
திருவிழாவை முன்னிட்டு வரும் 19ம் தேதி வெள்ளி ரிஷப
வாகனத்திலும், மறுநாள் 20ம் தேதி வெள்ளி தேரிலும்,
அதற்கு
அடுத்த நாள் அதாவது 21ம் தேதி மகாரதத்திலும் சுவாமி
வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது.
வருகிற 25ம் தேதி விடியற்காலை சரியாக 4 மணிக்கு பரணி
தீபமும், அன்று மாலை ஆறு மணிக்கு மகாதீபமும்
ஏற்றபடவிருக்கிறது.
தீப திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் தீபம்
ஏற்றும் அக்னி மலை மீது காவல்துறையினர் எந்தவிதமான
அசாம்பவிதமும் நடைபெறாமல் இருக்கவும், சட்டம் ஒழுங்கை
பராமரிக்கவும் காவல்துறை கட்டுப்பாட்டு அறை அமைக்க
முடிவு செய்துள்ளனர்.
முன்னதாக கார்த்திகை தீபத்தை முன்னிட்டு
திருவண்ணாமலையில் பாதுகாப்பு பணி குறித்து ஆய்வு செய்ய
வந்த டிஐஜி சுந்தரமூர்த்தி விழாவிற்காக அமைக்கப்பட
உள்ள ஒன்பது தற்காலிக பேருந்து நிலையங்கள் மற்றும் அதனை
சுற்றியுள்ள பகுதிகளை பார்வையிட்டார். இதன் பின்னர்
திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்
அலுவலகத்திற்கு சென்ற அவர் அங்கு உயரதிகாரிகள் மற்றும்
காவல்துறையினருடன் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த
ஆலோசனைகளை நிகழ்த்தினார்.
விழா அன்று தீப திருவிழாவிற்கு வரும் பக்தர்களின்
வசதிக்காக இரு கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கவும்,
ஆங்காங்கே ரகசிய கண்காணிப்பு காமிராவை
பொருத்தவும்,மேலும் முக்கிய விருந்திகனர்கள் வரும் போது
அவர்களை பாதகாக்கப்பட்ட வழியில் அனுமதிக்கவும்,
ஆலோசனையின் போது முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது. |